Thursday, March 17, 2011

கங்குலி - the great golden days

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சு விறுவிறுப்பா மேட்ச் எல்லாம் நடந்திட்டிருக்கு. அலுவலகத்துல நண்பர்ங்க எல்லாம் ரொம்ப ஆர்வமா சச்சின் செஞ்சுரி போடணும், இந்தியா ஜெயிக்கணும்னு வேண்டி விரும்பி ஒரு வெறியோட பாத்துட்டிருக்காங்க. இது நம்ம நாட்டுல ரொம்ப சகஜம்தான்.

நானும் ஒரு காலத்துல இப்பிடி வெறியா பாத்துக்கிட்டிருந்தவந்தான். ஆனா இப்போ எல்லாம் கிரிக்கெட் மேட்ச் எல்லாம் (இந்தியாவே ஆடினாலும்) எனக்கு வெறும் பெட்டிச் செய்தியாயிடுச்சு. எப்பவாவது கிரிக்கெட் பாக்க உக்காந்தாலும், மனசு அநியாயத்துக்கு நடுநிலையா இருக்கும். எந்த அணி நல்லா வெளையாடுறாங்களோ அந்த அணி ஜெயிக்கணும்னு பார்ப்பேன். எதிரா இந்தியாவே வெளையாடினாலும் அத பத்தி கவலை எதுவும் சுத்தமா இருக்குறதில்ல (யார் ஜெயிச்சாலும் தோத்தாலும் பெருசா பாதிப்பு இருக்குறதில்ல). இப்பிடித்தான் கடந்த ஒரு வருஷமா இருக்கேன்.

இப்பிடி இந்திய அணி மேலயும் கிரிக்கெட் மேலயும் எனக்கு இருந்த வெறி இப்ப இல்லாம போனதுக்கு ஒரே காரணந்தான் - கங்குலி.


கிரிக்கெட் பத்தி எனக்கு தெரியாத நாட்கள்ல எனக்கு அதைப்பத்தி சொல்லி குடுத்த நண்பன் பயங்கர சச்சின் வெறியன். 1996-ல அவன் மூலமாதான் நான் கிரிக்கெட் பாக்க கத்துக்கிட்டேன். ஆனா எனக்கு சச்சின் மேலயும் அவர் ஆட்டத்து மேலயும் பெருசா ஈர்ப்பு வரல, ஆனா அவர் கூட ஒப்பனிங் வந்த கங்குலியோட ஆட்டமும் அந்த முகமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதுவும் ஸ்பின் பவுளிங்ல ஒரு ஸ்டெப் எறங்கி வந்து சிக்சர் அடிக்கும் ஸ்டைல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

கங்குலி பேட்டிங் பண்ணுறப்ப மட்டுமில்லாம பீல்டிங், பவுலிங் பண்ணும்போதும் அவரோட நடை, பாவனை எனக்கு ரொம்பவே பிடிச்சுபோச்சு. ஆனா என்னோட நண்பர்ங்க பல பேருக்கு கங்குலிய சுத்தமா பிடிக்காது. அவங்க கூட பல தடவ பயங்கரமா சண்டை வந்திருக்கு. :) ஒரு சீசன்-ல அவர் சுத்தமா பார்ம் இல்லாம இருந்தப்போ எல்லாரும் கங்குலிய கிண்டல் பண்ணி வருத்தெடுத்தாங்க, அப்பல்லாம் எனக்கு சண்டை போட விஷயம் இல்லாததால அமைதியா போயிருக்கேன். ஆனாலும் அவர என்னால வெறுக்க முடியல. திரும்ப பார்முக்கு வந்து பட்டய கெளப்பனும்னு வேண்டிக்குவேன்.


அப்புறமா அவர் கேப்டனா ஆனதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் டீமுக்கே ஒரு கெத் வந்துச்சு. எவனும் நம்ம அணிகிட்ட வம்பு வளர்க்க முடியாது, தல 'தில்'லா அங்கயே பதிலடி குடுக்கும். 'தல'ய பத்தி தெரியாம வாலாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டவங்க நெறைய பேர் (அவர் எப்பவுமே "அன்புக்கு அன்பு, அடிக்கு அடி" பாலிசிதான். ) :)

சச்சின மட்டுமே நம்பி இருந்த நம்ம டீமுக்கு யுவி, ஷேவாக், கெய்ப், ஜாஹீர், ஹர்பஜன், தோனி இப்பிடி பல பேர மேட்ச் வின்னர்ஸ்-ஆ ஆளாக்கின பெருமை கங்குலிக்கு உண்டு. எல்லாத்துக்கும் மேல மேட்சுல இந்தியா ஜெயிச்சுடுச்சுன்னா, அவரோட மொகத்துல ஒரு தெனாவட்டு இருக்குமே, ச்சே! சான்ஸே இல்ல.

இப்பிடி எல்லாம் கங்குலிய ரசிச்சு ரசிச்சு பாத்துபுட்டு, அவர கேவலமா வெளிய அனுப்பி வச்சா எப்பிடி ஏத்துக்க முடியும்? அவர் இல்லாத ஒரு இந்திய அணிய 'நம்ம' அணியா என்னால யோசிக்க முடியல. 'தல' பல பாலிடிக்ஸ் பண்ணுனார்-னு தெரியும். ஆனா அதையும் தாண்டி அவர ரசிச்சேன். வெற்றி கேப்டனா தொடர்ந்து வளம் வரணும்னா அரசியல் பண்ணாம முடியுமா? அவரோட முழு ஆளுமையில இந்திய கிரிக்கெட் அணி இருக்குறது புடிக்காதவங்க, கேவலமான அரசியல் பண்ணி அவர வெளியில அனுப்பிட்டு, தன்னோட கண்ட்ரோல்-ல இருக்கக் கூடிய கேப்டன போட்டுக்கிட்டு வெறும் பணம் பண்ணும் வெளையாட்டா ஆக்கிட்டானுங்க. கங்குலியோட இந்த நெலமைய சச்சின் ரசிகர்ங்க எல்லாம் ஒரே குஷியா பாத்தாங்க. ஆனா எனக்கு 'தல'ய எப்பவும் ஒரு 'கெத்'தோடவே பாத்து பழகிட்டு, அவர அந்த நெலமையில பாக்கவே பிடிக்கல. அந்த நெலமைக்கு அவர ஆளாக்குன இந்திய கிரிக்கெட் அணிய சுத்தமா வெறுத்துட்டேன். போகப் போக கிரிக்கெட்டே பிடிக்காம போச்சு.


அப்புறம் மேட்ச் பிக்சிங் பிரச்சினை வேற. எது உண்மையான போட்டி, எது டிராமான்னு கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு கிரிக்கெட்ல பணம் வெளையாடுது. இப்போ எல்லாமே வெறுத்துடுச்சு. இதெல்லாம் சேந்து இப்போ இந்தியாவும் பாகிஸ்தானும் வெளையாடுற கிரிக்கெட் போட்டிக்கும், ஸ்ரீலங்கா தென் ஆப்பிரிக்கா வெளையாடுற கிரிக்கெட் போட்டிக்கும் எந்த வித்தியாசமும் என்கிட்ட இல்ல.எவன் ஜெயிச்சா என்ன, எவன் செஞ்சுரி அடிச்சா என்ன-ன்னு மனசு எதையும் கண்டுக்குறதே இல்ல. அது பல விதங்கள்ல நல்லதுதானன்னு நமக்கும் ரொம்பவே நிம்மதி. :)



கங்குலிய அவ்ளோ ஆக்ரோஷமா பாத்து பழகிட்டு, அவரோட இந்த பேட்டிய பாத்தா அவர் இவ்ளோ அமைதியானவரான்னு தோனுச்சு. அது இன்னும் அவர புடிச்சுப் போச்சு. ச்ச, திரும்ப கங்குலி விளையாடினா அதுவும் இந்தியாவுக்கு கேப்டனா விளையாடினா எப்பிடி இருக்கும்? ம்ம்ம்மம்மம்ம்ம்ம்.

-சமுத்ரன்

1 comment:

  1. > ச்ச, திரும்ப கங்குலி விளையாடினா அதுவும் இந்தியாவுக்கு கேப்டனா விளையாடினா எப்பிடி இருக்கும்? ம்ம்ம்மம்மம்ம்ம்ம்.

    நாட்டாமை... தீர்ப்பை மாத்தி சொல்லு...

    ReplyDelete