Sunday, January 30, 2011

கவிதைச் சிதறல்கள் 31-01-2011

இடம் பொருட்டில்லை

செய்யும் செயல் தடையில்லை

பிற மனிதர்கள் துணையில்லை

மாபெரும் கும்பலிலும் அறிதில்லை

ஒரு சிறு பார்வை போதும்

நாங்கள் பேசிக்கொள்ள!

**************

போன வருஷம் உனை பெண் பார்க்க வந்தோம்

வழியனுப்பும்போது யாருக்கும் தெரியாம ஓரக்கண்ணுல

'போயிட்டு வாங்க'ன்னு நீ எனைப் பார்த்த பார்வையில

என்னை மொத முறையா முழுசா தொலைச்சேன்

என் உயிரையே உருக்குன அதே ஓரக்கண் பார்வை இப்ப மறுபடியும்...

வெட்கத்தில் இருவருமே தொலைந்து போனோம்!

உறுதியான (+ve) கருச் சோதனை ரிப்போர்ட் என் கையில்!

***************

அவளுக்கு பிடிச்சா மாதிரி மஞ்ச கலர்ல

அசத்தலா ஒரு சுடிதார் வாங்கினேன்

கண் சிமிட்டலில் நன்றி சொல்லி அதை வாங்கிக்கொண்டாள்

மறுநாள் கோயிலுக்கு பச்சை நிற சேலையில் தயாரானாள்

"சேலை, அதுவும் பச்சை நிறம்னா உங்களுக்கு பிடிக்கும்னு சொன்னீங்களே?"

***************

பாக்காத மாதிரி நான் உன்ன பாக்குறதும்

அது தெரிஞ்சும் நீ என்னை பாக்காத மாதிரி பாக்குறதும்

எத்தனை சுகம் - அந்நாட்கள் திரும்ப வருமா?

நீயே என்னவளாய் அடுத்த ஜென்மத்திலும் வந்துவிடு...

***************

"இந்த டிரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க..."

"பொய்"

"இல்லடா, நீ உண்மையிலேயே அழகாத்தான் இருக்க..."

"எனக்குத் தெரியும், அது பொய்"

"சரி, பொய்ன்னே வச்சுக்கோயேன்"

<ஐயோ... அம்மா... அது அப்பிடி இல்ல...>

***************

நண்பன் திருமணத்திற்கு மனைவியுடன் நுழைகிறேன்

"எல்லாரும் பாக்குறாங்க, கைய விடுங்க"

யாருமே எங்களை கவனிக்கிறதா தெரியல

"அட, நீதான் என் கைய புடிச்சிருக்க..."

சிணுங்கலாய் ஒரு கிள்ளு!

அட, எதையுமே நேரா சொல்ல மாட்டிங்கறாங்க்கப்பா!

***************

-சமுத்ரன்

No comments:

Post a Comment