Wednesday, October 21, 2009

நானும் நியூயார்க் போனேன்

நியூயார்க் - அமெரிக்காவின் இதயம், அதன் அழகைக் காண்பது என் நெடுநாள் கனவு
நகரம் உறங்கும் போதும் அதன் இருட்டிலும் கூட அவ்வளவு அழகு
நேரம், தனிமை, பணம் - இவற்றை எளிதில் தொலைக்க அலையும் மக்கள் கூட்டம்
அடர்ந்தது - அந்நகர வீதிகள், நாம் சென்றது குளிர்காலமாதலால் வெண்
பனியும் படர்ந்து சுளீரென நம் தோல்களை குளிரில் சுண்டி இழுத்தன

கப்பல் ஏறி வலம் வந்தோம், சுதந்திர தேவி சிலையின் அழகை ரசித்தோம்
இறங்கியே மெல்ல நடந்தோம், கடல் நடுவே அந்நகரத்தின் அழகில் மெய்சிலிர்த்தோம்
காற்றும் குளிரும் ஒரு சேர நம் உடம்பை உறைய வைக்க, அங்கே
கரையில் நடந்தது பற்றி சொல்லித் தெரிய ஏதுமில்லை


நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் வலம் வந்தேன் - கண்ணாடி மாளிகைகளாலான வீதிகள்.
மெழுகுவர்த்தியும், தனிமை தேடும் ஜோடிகளும் அங்கங்கே காபி கடை மேசைகளில்...
தனிமையோ அமெரிக்கர்களின் நாட்டுடைமை மட்டுமல்ல பிறப்புரிமையும் கூட! அதில்
கொடுமை யாதெனில் விருப்பப்பட்டோருடன் தனிமையை அனுபவிக்கலாம்! எனது
கொடுமையோ அப்போது அங்கே என்னவள் அருகில் இல்லை என்பதுதான்!

<மேலே உள்ள வரிகளில் இருந்து ஏதும் உணரமுடிகிறதா? ("அதுவே ஒரு மொக்கை, இதுல இது வேறயா?" என்றெல்லாம் உண்மையை வெளியே சொல்லக் கூடாது...) தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்>


<மேலே உள்ள வரிகளின் முதல் சில வார்த்தைகளை மட்டும் சேர்த்து படித்தால் ஒரு பாடல் வருமே.... அந்த தடித்த வார்த்தைகளை மட்டும் கோர்வையாக மீண்டும் படித்து பாருங்களேன் - ஏதோ என் புத்திக்கு தோன்றிய ஒரு புது முயற்சி...

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது... கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது...
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ...

அந்த பாடலின் சரணம் கீழே தொடருகிறது>

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீயில்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீயில்லை

விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீயிங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயிங்கேயில்லை

நான் இங்கே நீயும்மங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் இங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

(நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...)

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எரும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில்-என்று பூமி இருந்தும் இந்த தருனத்தில் குளிர்காலம் கோடையானதேனா
வா அன்பே நீயும் வந்தால் செந்தனல் கூட பனிக்கட்டி போலே மாறுமே

(நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...)


திருமணத்திற்குப்பின் தனிமையில் இருப்போருக்கு மனதை இதமாக வருடும் பாடல். இப்பாடலை எழுதிய வாலியைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

-சமுத்ரன்

2 comments:

  1. ம்ம்... ரொம்ப காஞ்சு கிடப்ப போல?...
    எதயோ சொல்ல, இந்த பதிவ தொடங்கி....
    எதயோ சொல்ல முடியாம, இந்த பதிவ முடித்திருக்கிற...

    ReplyDelete
  2. //ம்ம்... ரொம்ப காஞ்சு கிடப்ப போல?...//
    அதென்னவோ உண்மைதான்டா!

    //எதயோ சொல்ல, இந்த பதிவ தொடங்கி....
    எதயோ சொல்ல முடியாம, இந்த பதிவ முடித்திருக்கிற...//
    சொல்ல முடியாமல் இல்லை, அதான் தெளிவா முடிவுல சொல்லிட்டேனே! :)

    ReplyDelete