Monday, August 2, 2010

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள்

தில்லாலங்கடி: சிங்கப்பூர் வந்து தியேட்டர்ல நான் பாத்தா மொத படம். என்னத்த சொல்ல? எதோ இன்னும் ஒரு டைம் பாஸ் படம் - அவ்வளவுதான். ஜெயம் ரவி வழக்கம் போல அவரோட வேலைய நல்லா பண்ணி இருக்காரு. அவங்க அண்ணன் வழக்கத்துக்கு மாறா மோசமான இயக்கம் (காப்பி). தமன்னா நடிப்புல நல்ல முன்னேற்றம். வடிவேலுவ பாக்கவே அருவருப்பா இருக்குது, அவரோட உடம்ப பாத்துக்கணும், இல்லைன்னா சுத்தமா பீல்ட் அவுட் ஆக வேண்டியதுதான். சந்தானம் கலக்கல்ஸ். பாட்டெல்லாம் கேக்கவே முடியல. "சொல் பேச்சு கேக்கும் சுந்தரி பாட்டு கஷ்டப்பட்டு நல்லா படமாக்கி இருந்தாங்க. முதல் பாதி - தியேட்டர்ல ஜாலி, ரெண்டாம் பாதி - செம்ம மொக்கை (குறிப்பா க்ளைமேக்ஸ்).


களவானி: இந்த படத்தோட ரொம்ப பெரிய வெற்றியால, நான் ரொம்ப எதிர்பார்த்து பாக்க போனேன். ஆனா படத்துல அந்த லோக்கேஷனத் தவிர சொல்லிக்கிற படி எதுவுமே இல்லை. பருத்தி வீரன் படம் வந்து ஹிட் ஆனதும் ஆச்சு, ஆளாளுக்கு தாடி வச்ச வெட்டிப் பய ஹீரோ + காதல்னு கத பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அதுவும், சின்ன பசங்க காதல்ங்கறதால என்னால சரியா படத்தோட ஒன்றவே முடியல. இயக்கமும் வசனமும் பல இடங்கள்ல படு சொதப்பல். "இன்னொரு படம்"-னு போக வேண்டியது, அழகான கதாநாயகி + கஞ்சா கருப்பு காமெடினால பொழச்சுகிட்டுதுன்னு நெனக்கிறேன்.

மதராசப்பட்டினம்:
பழைய சென்னைய ரொம்ப அழகா காட்டி இருக்காங்க. படம் ரொம்பவே நல்லா இருந்தது. இதுல நடிச்ச அத்தனை பேரும் கலக்கலா நடிச்சிருக்காங்க, முக்கியமா எமியா வர்ற அந்த லண்டன் ஹீரோ-இன். நம்ம வட நாட்டு நடிகைகள எல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டாங்க அவங்க. பல காட்சிகள்ல கண்லயே நடிக்கிறாங்க. ஆர்யாவும் அருமை. ஆர்யாவும் எமியும் தங்களோட காதல சொல்லிக்கிற சீன் + இசை அற்புதம். என்னமோ போங்க, இந்த படம் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு.
-சமுத்ரன்

1 comment:

  1. உங்களுக்கு களவாணி பிடிக்கலையா! :-o

    எனக்கு இந்தப்படம் ரொம்ப பிடித்து இருந்தது... நண்பர்களுடன் சென்று இருந்தால் ஒருவேளை ரசித்து இருப்பீர்களோ! இயக்கம் எல்லாம் மொக்கைனு சொல்லிட்டீங்களே! :-))

    ரசனைகள் வேறு! ;-)

    ReplyDelete