2011, மார்ச் 20. ஞாயிறு காலை 8 மணி. சுதாகரன், அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள தன் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவி மற்றும் 2 மகள்களும் அதே வீட்டில் அவருடன் வசித்து வருகின்றனர். சுதாகரன் தன் குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து இப்போது 3 வருடங்கள் ஆகின்றன.
அவர் வீட்டின் கதவு தட்டப்படுகிறது. சுதாகரன் அந்நேரத்தில் யாரையும் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கவில்லை, சுதாகரன்தான் தன் நண்பரை சந்திக்க அவர் வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தார். எனவே குழம்பியவாறே தூக்கக் கலக்கத்தில் கதவின் சிறு துளைக் கண்ணாடியில் வெளியே நிற்கும் ஆளை பார்க்கிறார். வெளியே வித்தியாசமான கெட்டப்பில் அடையாளம் தெரியாத ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.
சுதாகரன் கதவைத் திறந்து, "how can I help you?" என்று கேட்கிறார். வந்தவர் "நீங்கள் தமிழிலேயே பேசலாம். என் பெயர் Jack Tommy FDU10584, நான் 2167-ம் ஆண்டிலிருந்து வருகிறேன்" என்கிறார். சுதாகரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
சுதாகரன்: | sorry, நீங்க எதோ தப்பான address-க்கு வந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன், யார பாக்கணும்? |
Jack: | இல்லை இல்லை. திரு சுதாகரன், நான் உங்களைத்தான் பாக்க வந்தேன் |
சுதாகரன்: | ஒகே. என்ன விஷயம்? |
Jack: | நான் செய்த ஒரு தவறுக்கு தண்டனையா இங்கு வந்திருக்கிறேன் |
சுதாகரன்: | புரியலையே |
Jack: | சுருக்கமா சொல்றேன்... நீங்கள் குடும்பத்துடன் இந்நேரம் காரில் வெளியில் கிளம்பி இருக்க வேண்டும், சரிதானே? |
சுதாகரன்: | ஆமா, ஏன் கேட்குறீங்க? அத பத்தி உங்களுக்கு என்ன? |
Jack: | இல்லை, எனக்கு தகவல் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன், அதனால்தான் கேட்டேன். |
சுதாகரன்: | புரியல, அதுக்கு எதுக்கு என்னை கேக்குறிங்க? |
Jack: | மன்னிக்கணும், எனக்கு இந்த தண்டனை புதிதென்பதால் சிறு பதற்றத்தை உணர்கிறேன். உட்கார்ந்து நிதானமாக பேசலாமா? |
சுதாகரன்: | sure sure, உள்ள வந்து உட்காருங்க. இப்ப சொல்லுங்க... |
Jack: | அதாவது நான் பிறந்தது 2049 ஜூன்ல. இப்போ எனக்கு 27 வயசாகுது |
சுதாகரன்: | கொஞ்சம் இருங்க, இதை புரிஞ்சுக்க சிரமமா இருக்கு. நீங்க சொல்றது உண்மைன்னா, இப்போ 2011 ல நீங்க எப்பிடி? |
Jack: | அதான் சொன்னேனே, நான் செய்த ஒரு தவறுக்கு தண்டனையா Time dilation மூலமா 2011க்கு என்னை அனுப்பி இருக்காங்க |
சுதாகரன்: | ம். நீங்க பாக்குறதுக்கு வயசுல ரொம்ப சின்னவரா தெரியுது. அப்புறம் காதுல ரவுண்டா எதோ இருக்குதே! |
Jack: | ஆமா, டியுப்ல இருந்து குழந்தை வெளிவந்த உடனே பெயரோட சேத்து ஒரு புது எண் குடுத்திடுவாங்க. எனக்கு FDU10584. கூடவே அந்த குழந்தை காதுல இந்த மாதிரி கருவிய பொருத்திடுவாங்க. செயற்கைக்கோள் மூலமா இந்த கருவிய வச்சு அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவையும், தடுப்பு மருந்துகளையும் அரசாங்கம் தீர்மானிக்கும் |
சுதாகரன்: | எதுக்காக அப்பிடி |
Jack: | ஏன்னா, புதுப்புது வகையான கிருமிகள் வந்துட்டே இருக்குறதால நாம இருக்குற இடம், சுழ்நிலைய கண்காணிச்சு அதுக்கேற்ற மருந்துகள குடுத்துட்டே இருப்பாங்க. அரசாங்கம் தீர்மானிக்கும் உணவும் மருந்தும் நான் அப்போது எங்க இருக்கேனோ அங்கேயே வந்துடும். எங்க உடம்புல ஏற்படக் கூடிய புதிய மாற்றங்களையும் அரசாங்கம் இது மூலமா கண்காணிக்கும். எங்களோட அவசர உதவிக்கும் இதே கருவிய பயன்படுத்த முடியும். என்னோட ஒவ்வொரு அசைவையும் அரசாங்கம் கண்காணிச்சு, அதை சேமிச்சு வைக்க முடியும். அதன் மூலமா ஒரு குறிப்பிட்ட நேரத்துல நான் எங்க என்ன பண்ணிட்டு இருந்தேன்னும் கண்டுபிடிக்க முடியும். ஆனா நான் பேசுறத கண்காணிக்க முடியாது |
சுதாகரன்: | பிறப்பு இறப்பு இதெல்லாம்? |
Jack: | குழந்தை வேண்டும் என்றால், கணவனும் மனைவியும் அரசாங்கத்திடம் விண்ணபிக்க வேண்டும்; அதற்கு அவர்கள் இருவரும் 21 வயதுக்கு மேலும் 35 வயதுக்குள்ளும் இருக்க வண்டும். எங்கள் விண்ணப்பத்தை ஏற்று அரசாங்கம் carrying-tube ல் எங்கள் அணுக்களை செலுத்தி, நம் விருப்பப்படி குழந்தை ஆணோ / பெண்ணோ, அதற்கேற்ற மருந்துகளை செலுத்தி, கருவை உருவாக்குவார்கள். நாமாக கருத்தரித்து குழந்தையை உருவாக்க முடியாது. எனக்கும் 2 குழந்தைங்க இருக்காங்க, என்னோட விருப்பப்படி முதலாவது பெண் குழந்தை, ஏன் காதலி விருப்பப்படி ரெண்டாவது ஆண் குழந்தை. இறப்பில் எந்த மாற்றமும் இல்லை, உங்களைப் போலதான் |
சுதாகரன்: | ஆச்சர்யமா இருக்கு. உங்களை பாக்குறதுக்கு எதோ மிஷின் மாதிரி இருக்கு |
Jack: | ஹா ஹா. இதே காரணத்த சொல்லி, இப்போ அங்க (2167) பல பேர் போராட்டங்களும் பண்ணிட்டுதான் இருக்காங்க, ஆனா நான் அப்படி நினைக்கல |
சுதாகரன்: | ஏன்? |
Jack: | இது எல்லாமே எங்க நல்லதுக்குதான் பண்ணி இருக்காங்க, யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் நம்ம விருப்பப்படி இருந்தால் எந்த சிறு பிரச்சினைகளும் இல்லை |
சுதாகரன்: | நீங்க பாக்குறதுக்கு தமிழன் மாதிரி இல்லியே, எப்பிடி இப்பிடி அழகா தமிழ் பேசுறிங்க? |
Jack: | எனக்கு 12 மொழிகள்ல எழுத, படிக்க, பேசவும் தெரியும். நாம் விரும்பிய மொழிகளை முழுமையாக கற்றுக்கொள்ள அனைத்து வசதிகளும் internet-ல் உள்ளது |
சுதாகரன்: | ஓ, ஆச்சர்யம்தான். உங்களுக்கு எழுதக் கூட தெரியுமா? |
Jack: | எழுதுவதென்றால் எங்களுக்கு type பண்ணுவது மட்டும்தான். உங்களைப் போல் எழுதுவதற்கு எங்களுக்கு அவசியமில்லாமல் போய் விட்டது, அனைத்து வேலைகளுக்கும் கருவிகள் உள்ளன. என் தோழர்கள் யாருக்கும் பேனாவில் நீங்கள் எழுதுவதுபோல் எந்த மொழியிலும் எழுதத் தெரியாது |
சுதாகரன்: | நீங்க சொல்றது ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமா இருக்கு. ஆமா... இப்போ எப்பிடி, எதுக்கு 2011க்கு வந்திருக்கீங்க? |
Jack: | நான் என்னோட வாகனத்தை ஓட்டிட்டு போகும்போது தெரியாம ஒரு தவறு செய்துவிட்டேன். அதிக பட்ச அபராதம் விதிக்கப்பட்டதால் நான் செய்தது சிறு தவறுதான் என நீதிமன்றத்தில் வாதிட்டேன். அது வெறும் சிறு தவறல்ல என்றும் அது எனக்கு புரிய வேண்டுமென்றும் கூறி, Feel-Impacts-through-Time-Dilation தண்டனை மூலம் என்னை இங்கு அனுப்பி விட்டார்கள் |
சுதாகரன்: | நீங்க சொல்றத கேட்டா எனக்கு பயமா இருக்கு. இப்பிடி எதுவும் நான் கேள்விப்பட்டதே இல்ல. அதென்ன தண்டனை? |
Jack: | ஒருத்தர் செய்த சிறு தப்பும் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணரனும்னு அவரோட மூலையில காலத்தை உணரும் செல்களோட அளவுகோள மாற்றும் ஊசி போட்டு நினைவுகள திருப்பி இப்பிடி ஒரு குறிப்பிட்ட கடந்த காலத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி அங்கு நடந்ததை பார்த்து தன் தவறை உணரும் படி தண்டனை குடுப்பாங்க |
சுதாகரன்: | ஆச்சர்யமா இருக்கே! வேற என்ன மாதிரி தண்டனை எல்லாம் குடுப்பாங்க? |
Jack: | தெரியாமல் செய்யும் தவறுக்கு இந்த மாதிரி நேரில் உணர்ந்து புரிந்துகொள்ளும் தண்டனையும், தெரிஞ்சே செய்யும் தவறுக்கு, குறிப்பிட்ட காலம் மருந்து மூலம் அசைவுகளை செயலிழக்க வைக்கும் வரை தண்டனைகள் உண்டு. அனைத்தும் மருந்துகள் மூலம்தான் |
சுதாகரன்: | அப்படி என்ன தவறு செஞ்சிங்க? |
Jack: | சிக்னலில் சிவப்பு விளக்குக்கு மாறும்போது நிற்காமல் சென்றுவிட்டேன் |
சுதாகரன்: | இதெல்லாம் ஒரு matter-ஆ? |
Jack: | நானும் இதேதான் சொன்னேன். அதுக்குதான் என்னை இங்க அனுப்பிட்டாங்க. நான் இன்று மாலைதான் வந்தேன், ஆனால் அது 7 மணி நேரம் தாமதம் என உணர்ந்து 7 மணி நேரம் முன்னோக்கி சென்று இப்போ வந்திருக்கிறேன் |
சுதாகரன்: | இங்க வந்து என்ன பண்ணுவீங்க? |
Jack: | நான் பண்ணின மாதிரியே சிறு தப்பால நடக்கபோற கொடூர விபத்தை நான் பார்க்க வேண்டுமாம் |
சுதாகரன்: | accident-ஆ? யாரு பண்ண போறா? |
Jack: | நீங்கதான்... |
சுதாகரன்: | நானா? |
Jack: | ஆமா, உங்க car-ஐ இன்னிக்கு நான் பின் தொடர்ந்து வரப் போகிறேன். நீங்க இன்னிக்கு உங்க நண்பர் வீட்டுக்கு போகும்போது நீங்க பண்ற சிறு தப்பால நடக்கப்போற விபத்த பார்த்து உணரத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்... (சுதாகரன் மயங்கி விழுகிறார்...) |
சமுத்ரன் |
wow.. pattaya kelapunga boss :) okkandhu yosipeengalo?
ReplyDeletebtw.. If Jack has revealed abt the accident, then it would not happen.. right? i mean, Sudhakaran will not even drive that day :)
-Madhes
hahaha, yes Madhes. Thats a complex twist which I left to the audience's guess...
ReplyDeleteGood one.. I really liked your conception & the idea.. Though we always ask those questions :) about time-travelling...
ReplyDeleteKeep it up...
-Madhes
Sshh… Have you seen any Hollywood movies recently like Time Machine, Hot tub Time machine, Terminator?.
ReplyDeleteWhen I read this story(really its story), I had the same feeling when I was watching that movies. Onnume puriyalada...
-7G
I cld not understand wht u r trying to tell. But it's interesting too.
ReplyDelete-Ram
ஆஹா.. இந்த லாஜிக் (comment copy-paste from mails) கூட நல்ல இருக்கே..
ReplyDeleteI came here to put my comment.. but surprised to see the comment already! :)
Continue பண்ணுங்க பாஸ்.. :))