Wednesday, September 28, 2011

அப்போ நிரஞ்சன் எங்கூட இருந்தான்...

ஆபிஸ்ல அப்படி ஒண்ணும் பெருசா வேலை இல்ல
ஆனாலும் ஒருபக்கம் டென்ஷன் இருந்துட்டே இருக்கு

புதுசா வந்திருக்குற ஜாலியான படத்த தியேட்டர்ல போயி பாக்குறேன்
படம் முடிஞ்சு வெளில வந்தா திரும்பவும் டென்ஷன்

ரொம்ப புடிச்ச பாட்ட ஹோம் தியேட்டர்ல அலற விடுறேன்
ஒரு பாட்ட கூட முழுசா ரசிக்க முடியல

மணிக்கணக்குல உக்காந்து டீவி பாக்குறேன்
மசமசன்னு இருக்குது, ஒரு பிரயோஜனமுமில்ல

நெனச்சத சாப்பிட்டுட்டு ஜாலியா ஊற சுத்தலாம்னு கெளம்பறேன்
வீட்ட விட்டு வெளில வந்தா ஒரு பிளானும் வெளங்கல

அட எதுவுமே வேண்டாம்டா நல்லா தூங்குவோம்னு படுத்தா
தூக்கம் வருவனாங்குது

போன மாசம் வரைக்கும் இப்பிடியெல்லாம் நான் கொஞ்சங்கூட கஷ்டப்பட்டதே இல்ல
ஏன்னா, அப்போ நிரஞ்சன் எங்கூட இருந்தான்... இல்ல இல்ல, நிரஞ்சன் கூட நான் இருந்தேன்.

-சமுத்ரன்